< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து ? ஆஷஸ் 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
|5 July 2023 4:55 PM IST
இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
லீட்ஸ்,
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை ( 6-ந் தேதி) தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள். . இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது.
.