< Back
கிரிக்கெட்
அடுத்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் இருப்பேன் : டி வில்லியர்ஸ் கருத்து - ரசிகர்கள் உற்சாகம்

Image Courtesy : PTI 

கிரிக்கெட்

அடுத்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் இருப்பேன் : டி வில்லியர்ஸ் கருத்து - ரசிகர்கள் உற்சாகம்

தினத்தந்தி
|
24 May 2022 4:18 PM IST

அடுத்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் இருப்பேன் என பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்


தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், 2011 முதல் 2021 வரை பெங்களூரு அணிக்காக 156 போட்டிகளில் விளையாடி உள்ளார். பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த அவர் அந்த அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார் . தனது அதிரடி ஆட்டத்தால் ,வித்தியாசமான ஷாட்களினால் சிக்ஸர்கள் பறக்க விட்டு ரசிகர்களை கவர்ந்த அவர் நடப்பு சீசனில் அவர் விளையாடப் போவதில்லை என முன்னதாகவே தெரிவித்தார்.இவரது இந்த முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் அடுத்த சீசனில் டிவில்லியர்ஸ் பெங்களூரு அணியில் சேர வாய்ப்புள்ளதாக விராட் கோலி கூறியிருந்தார்.

இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் இருப்பேன் என பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் கூறியதாவது ;

இதனை விராட் கோலி உறுதிப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி"அடுத்த சீசனில் நான் நிச்சயம் இருப்பேன். ஆனால் அது எப்படி என்பதை இன்னும் நாங்கள் உறுதி செய்யவில்லை. வரும் சீசனில் பெங்களூருவில் சில போட்டிகள் இருக்கும். அதனால் எனக்கு மகிழ்ச்சி. பெங்களூரு கிரிக்கெட் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பிய அந்த காட்சியை காண மிகவும் ஆர்வமாக உள்ளேன். அணிக்கு மீண்டும் திரும்புவதை நான் மிகவும் விரும்புகிறேன். ஆவலுடன் எதிர்பார்த்தும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.

Related Tags :
மேலும் செய்திகள்