< Back
கிரிக்கெட்
இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? - பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? - பி.சி.சி.ஐ தரப்பில் வெளியான தகவல்

தினத்தந்தி
|
19 July 2024 7:52 AM GMT

இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடிக்கவில்லை. அதேபோல் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்வாட் ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பிடிக்கவில்லை.

இந்த தொடருக்கான டி20 அணிக்கு முதலில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் துணை கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில் பாண்ட்யாவை விட சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாடுவது நன்றாக இருக்கும் என்று பல வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் கூறியதாலும், கவுதம் கம்பீரும் அதற்கு விருப்பம் தெரிவித்ததாலும் சூர்யகுமார் யாதவ் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதாக பி.சி.சி.ஐ நிர்வாகி ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அந்த நிர்வாகி கூறும்போது, ஹர்திக் பாண்ட்யாவை விட சூர்யகுமார் தலைமையில் விளையாடுவது நன்றாக இருக்கும் என்று பல வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தனர். புதிய பயிற்சியாளரும் பணிச்சுமை பற்றி யோசிக்காமல் தொடர்ந்து விளையாடக்கூடிய வீரரையே விரும்புகிறார். அதனாலயே சூர்யகுமார் யாதவ் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்