< Back
கிரிக்கெட்
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க தாமதம் ஏன்..? வெளியான தகவல்
கிரிக்கெட்

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க தாமதம் ஏன்..? வெளியான தகவல்

தினத்தந்தி
|
9 July 2024 11:36 AM GMT

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

மும்பை,

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் தங்களது முடிவுகளை அறிவித்தனர்.

மேலும், டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த செய்தி வெளியாகி ஒரு மாதமாகியும் அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றி கம்பீருக்கும் பிசிசிஐ-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கு வழங்கப்பட்டதை விட கம்பீர் கொஞ்சம் அதிக சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனாலேயே பிசிசிஐ அவரை பயிற்சியாளராக அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்