< Back
கிரிக்கெட்
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஏன் ? -  இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்
கிரிக்கெட்

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஏன் ? - இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்

தினத்தந்தி
|
11 Jun 2023 7:17 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா நேற்றைய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில், இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கின. கோலி 49 ரன்களுடனும், ஜடேஜா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்ற ரஹானே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷர்துல் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். உமேஷ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று ஆடிய பரத் 23 ரன்னில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் போட்டிக்கு பின் வர்ணனையாளராக செயல்பட்ட இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட்யிடம் , இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பந்துவீசுவதைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி என்ன?" என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த டிராவிட் ,

இது அழுத்தம் பற்றியது அல்ல. வானிலை மேகமூட்டமாக இருந்ததாலும், ஆடுகளத்தில் நிறைய புல் இருந்ததாலும் போட்டியில் முதலில் பந்து வீச முடிவு செய்தோம். எனவே, ஆடுகளத்தில் பின்னர் பேட்டிங் செய்வது எளிதாகிவிடும் என்று நாங்கள் நினைத்தோம், அதுதான் இங்கேயும். சமீப காலங்களில் பெரும்பாலான அணிகள் இங்கிலாந்தில் முதலில்பந்து வீச முடிவு செய்துள்ளன.

70 / 3 என்ற நிலையில் இது ஒரு சிறந்த முடிவு என்று நாங்கள் நினைத்தோம், அடுத்த இரண்டு செஷனில் நாங்கள் நிறைய ரன்களை கொடுத்துவிட்டோம் . நாங்கள் அவர்களை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால் , நாங்கள் போட்டியில் இருந்திருப்போம். . நான்காவது இன்னிங்ஸில் ஒரு வாய்ப்பு இருந்திருக்கும் என கூறினார் .

மேலும் செய்திகள்