ஐ.சி.சி.யின் மே மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்றவர்கள் யார்?... யார்?
|ஐ.சி.சி. ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்து இருந்தது.
அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் குடகேஷ் மோடி, பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி, அயர்லாந்தின் லோர்கன் டக்கர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் மே மாதத்திற்கான சிறந்த வீராக குடகேஷ் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் சமாரி அத்தபட்டு, ஸ்காட்லாந்தின் கேத்ரின் பிரைஸ், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் சிறந்த வீராங்கனையாக சமாரி அத்தபட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.