யார் தலைமையின் கீழ் விளையாடுவீர்கள்... தோனியா...கோலியா...? - ஜோ ரூட் அளித்த பதில்...!
|தோனி அல்லது கோலி யாருடைய கேப்டன்ஷிப்பின் கீழ் விளையாடுவீர்கள் என்ற கேள்விக்கு ஜோ ரூட் பதில் அளித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் முக்கியமான கட்டத்தை நெருங்கி உள்ளது. அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரூட், துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலுக்கு இது அல்லது அது என்று பதில் அளித்து வந்தனர்.
அப்போது அந்த கேள்விகளில் யாருடைய கேப்டன்ஷிப்பின் கீழ் விளையாடுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு தோனி அல்லது கோலி என விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த கேள்விக்கு ஜூரெல் மற்றும் படிக்கல் தோனி என உடனடியாக முடிவெடுத்தனர்.
ஆனால் சிறிது நேரம் யோசித்த ரூட் இறுதியாக அந்த கேள்விக்கு தோனி என பதில் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.