தொடரை கைப்பற்றுவது யார்...கடைசி டி20 போட்டியில் யுஏஇ-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்...!
|தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
துபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. துபாயில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் யுஏஇ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் யுஏஇ அணி தீவிரம் காட்டும்.
அதேபோல், தொடரை இழக்க கூடாது என்பதற்காக நியூசிலாந்து அணியும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.