< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
தொடரை கைப்பற்றப்போவது யார்..? - கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் இன்று மோதல்..!
|2 Jan 2024 5:20 AM IST
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானும், 2வது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில் டொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆப்கானிஸ்தானும், அதேவேளையில் கடந்த ஆட்டத்தை போல இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து தொடரை கைப்பற்ற யுஏஇ அணியும் ஆட உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.