< Back
கிரிக்கெட்
ரஞ்சி கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை - விதர்பா அணிகள் நாளை மோதல்

image courtesy: twitter/@BCCIdomestic

கிரிக்கெட்

ரஞ்சி கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை - விதர்பா அணிகள் நாளை மோதல்

தினத்தந்தி
|
9 March 2024 3:56 PM IST

ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் நாளை மோத உள்ளன

நாக்பூர்,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைய உள்ளது. ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றிருந்தன. லீக் மற்றும் காலிறுதி சுற்றுகளின் முடிவில் தமிழ்நடு, மும்பை, விதர்பா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியில் தமிழக அணியை வீழ்த்தி மும்பையும், மத்திய பிரதேச அணியை வீழ்த்தி விதர்பாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன.

இதனையடுத்து இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் நாளை மோத உள்ளன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. முன்னதாக இந்த கோப்பையை மும்பை அணி 42 முறையும், விதர்பா 2 முறையும் கைப்பற்றி உள்ளன.

மேலும் செய்திகள்