< Back
கிரிக்கெட்
அடுத்த உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? கோலி, ரோகித்தின் எதிர்காலம் என்ன? பிசிசிஐ-யின் பலே திட்டம்

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

அடுத்த உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? கோலி, ரோகித்தின் எதிர்காலம் என்ன? பிசிசிஐ-யின் 'பலே' திட்டம்

தினத்தந்தி
|
4 Nov 2022 7:36 AM IST

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின், கேப்டன் பதவி குறித்து ரோகித் சர்மா உடன் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.

புதுடெல்லி,

ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுக்கும். இந்திய அணியில் இருந்து விராட் கோலி திடீரென விலகியதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மாவுக்கு 35 வயதாகிறது. அவர் இன்னும் அதிகமான காலம் விளையாட வாய்ப்பில்லை. அதற்குள் அடுத்தக்கட்ட கேப்டனை தயார் படுத்த பிசிசிஐ விரும்புகிறது.

மேலும், போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஓய்வு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக உள்ளார். இதனால் அவருக்கு அடிக்கடி ஓய்வு அளிக்க இயலாது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், அடிக்கடி ஓய்வு அளிக்கப்படுகிறது. அதேபோல் ரோகித் சர்மாவுக்கும் அடிக்கடி ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புகிறது.

ஆகவே, ரோகித் சர்மா அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்குப்பின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை. விராட் கோலிக்கு மிகப்பெரிய தொடரை தவிர்த்து மற்ற டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வலியுறுத்தப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளதாக செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் வெளியான தகவல் பின்வருமாறு:-

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்குப்பின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடம் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் விரிவாக கலந்துரையாடுவார்கள். ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட மாட்டார்கள்.

ஆனால், அவர்கள் இருவரும் 35 வயதை தொடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதோடு இருவரும் இந்திய அணிக்கு முக்கியமான வீரர்கள். தொடர்ந்து பெரிய தொடர்கள், ஐசிசி தொடர்கள் வருவதால் அவர்களுக்கு சுழற்சி முறை மற்றும் ஓய்வுகள் தேவை. ஆனால், ஒரு கேப்டனை அடிக்கடி சுழற்சி முறையில் மாற்ற முடியாது.

டி20-யில் கவனம் செலுத்த முடியாது என்பதால் ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் கேப்டன் பதவிக்கு தயாராகும்போது, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக வெளியேற்ற வேண்டும். அதேபோல் விராட் கோலியிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படும்.

பிசிசிஐ-யின் திட்டம்:-

ரோகித் சர்மா

1. ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பையில் இருந்து ரோகித் சர்மா மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக தொடரமாட்டார்.

2. ஆனால், 2024 வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக அளவில் கவனம் செலுத்துவார்.

3. டி20-யில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல். ராகுல், பண்ட் ஆகியோர் 2024 வரை கேப்டன் பதவியை பகிர்ந்து கொள்வார்கள்.

4. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின், கேப்டன் பதவி குறித்து ரோகித் சர்மா உடன் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.

5. காயம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா 2024 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை.

6. அதற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் வளர்க்கபட்டு வருகிறார்கள். ஹர்திக் பாண்ட்யா தேர்வாளர்களால் கவர்ந்துள்ளார்.

7. ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் ஐ.பி.எல். தொடரில் சிறந்த கேப்டன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். கே.எல். ராகுலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள்.

8. ஆனால், அனைத்து மாற்றங்கள் குறித்தும் 2023 உலகக் கோப்பைக்கு பின் பேசப்படும்.

விராட் கோலி

1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக்குப்பின் விராட் கோலி தொடர்ந்து டி20 போட்டியில் விளையாட முடியாது.

2. தேர்வாளர்கள் அவரை முக்கியமான மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக மட்டும் தேர்வு செய்வார்கள்.

3. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் அதிக அளவில் கவனம் செலுத்த வலியுறுத்தப்படுவார். 2023-ல் டி20 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால், தேர்வுக்குழு அதற்கான பணிகளை தொடங்கிவிட்டது.

மேலும் செய்திகள்