< Back
கிரிக்கெட்
தொடரில் முன்னேறப்போவது யார்? - 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா- இலங்கை இன்று மோதல்
கிரிக்கெட்

தொடரில் முன்னேறப்போவது யார்? - 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா- இலங்கை இன்று மோதல்

தினத்தந்தி
|
4 Aug 2024 6:42 AM IST

இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

கொழும்பு,

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியா வென்ற நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. தொடரில் முன்னேற இரு அணிகளும் முயற்சி செய்யும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கும் நிலையில், போட்டி மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்