< Back
கிரிக்கெட்
மிகவும் பிடித்த பந்து வீச்சாளர் யார்..? எம்.எஸ்.தோனி பதில்
கிரிக்கெட்

மிகவும் பிடித்த பந்து வீச்சாளர் யார்..? எம்.எஸ்.தோனி பதில்

தினத்தந்தி
|
1 Aug 2024 2:24 PM IST

எம்.எஸ். தோனியிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிடித்த பந்து வீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர்.

அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். அதனால் எங்கு சென்றாலும் தோனிக்கு அனைத்து இந்நாள் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து பாராட்டுவது வழக்கமாகும்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனியிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிடித்த பந்து வீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எம்.எஸ். தோனி, "உலகிலேயே தற்சமயத்தில் ஜஸ்பிரித் பும்ராதான் தமக்கு மிகவும் பிடித்த பவுலர்" என்று பாராட்டியுள்ளார்

மேலும் செய்திகள்