< Back
கிரிக்கெட்
டோனிக்கு பிறகு கேப்டன் யார்...? - சென்னை அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில்

Image Courtesy: @ChennaiIPL

கிரிக்கெட்

டோனிக்கு பிறகு கேப்டன் யார்...? - சென்னை அணியின் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில்

தினத்தந்தி
|
13 March 2024 6:54 AM IST

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது.

சென்னை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

சென்னை அணியின் கேப்டன் 42 வயதான டோனிக்கு இதுவே கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவருக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,

கேப்டன், துணை கேப்டன் நியமனம் பற்றி பேச வேண்டாம். அதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் (டோனி) விட்டுவிடுங்கள் என்றார்.

எனவே அவர்கள் (கேப்டன் மற்றும் பயிற்சியாளர்) முடிவு செய்து என்னிடம் தகவல் சொன்ன பிறகு அதை உங்களிடம் தெரிவிக்கிறேன. அதுவரை அமைதியாக இருங்கள். நடப்பு ஐ.பி.எல். தொடரில் நாக்-அவுட் சுற்றை எட்டுவது தான் முதல் இலக்கு. அதில் தான் எங்களது கவனம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்