< Back
கிரிக்கெட்
தோனி மற்றும் ரோகித் இருவரில் யார் சிறந்த கேப்டன்..? இந்திய வீரர் பதில்

image courtesy: AFP

கிரிக்கெட்

தோனி மற்றும் ரோகித் இருவரில் யார் சிறந்த கேப்டன்..? இந்திய வீரர் பதில்

தினத்தந்தி
|
10 Aug 2024 6:01 AM GMT

தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்? என்று ஷர்துல் தாகூரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.

மறுபுறம் எம்.எஸ். தோனிக்கு பின் ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை வென்ற 2வது இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ஐபிஎல் தொடரில் தோனிக்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்ற அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதனால் இந்தியாவின் கேப்டனாகவும் பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் 2023-ல் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை தொடர் தோல்விகளை உடைத்து கோப்பையை வென்ற அவர் எம்.எஸ். தோனிக்கு நிகராக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் எம்.எஸ். தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்? என்று ஷர்துல் தாகூரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எம்.எஸ். தோனி தான் சிறந்த கேப்டன் என்று தாகூர் கூறினார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் ரோகித் சர்மா என்னுடைய சிறந்த நண்பர். எனவே நான் எம்.எஸ். தோனியை தேர்ந்தெடுப்பேன். ஒருவேளை நான் இப்படி சொன்னதற்காக தவறாக புரிந்து கொண்டு கோபமடைந்தாலும் ரோகித்திடம் சென்று சமாளித்து விடுவேன். நான் பேசும் இந்த வீடியோ வைரலாகி ரோகித் சர்மாவிடம் செல்லும்போது அவர் தொலைபேசியில் என்னுடன் கோபமான நட்புடன் பேசலாம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்