< Back
கிரிக்கெட்
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன் - துருவ் ஜூரெல்

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன் - துருவ் ஜூரெல்

தினத்தந்தி
|
28 April 2024 4:48 AM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

லக்னோ,

ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 76 ரன், தீபக் ஹூடா 50 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71 ரன்னும், துருவ் ஜூரெல் 52 ரன்னும் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர்.

இதையடுத்து அபாரமாக ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ராஜஸ்தான் வீரர் துருவ் ஜூரெல் அளித்த பேட்டியில் கூறியதாவது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன். அதனால் கடைசி வரை நின்று என்னுடைய அணிக்காக போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன்.

பவர் பிளேவில் 2 பீல்டர்கள் மட்டுமே வெளியே இருப்பார்கள். மிடில் ஓவர்களில் 5 பேர் வெளியே இருப்பார்கள். எனவே அதற்கு தகுந்தார் போல் பயிற்சிகளை செய்கிறேன். பேட்டிங்கில் நன்றாக துவங்கியும் நான் அடித்த ஷாட்டுகள் கைகளுக்கு சென்றது. அப்போது கடினமாக அடிக்காமல் அமைதியாக பொறுமையுடன் விளையாடுமாறு சஞ்சு சாம்சன் என்னிடம் சொன்னார்.

அதனால் நேரம் எடுத்து விளையாடிய நான் ஒரே ஓவரில் 20 ரன்கள் அடித்து பின்னர் அப்படியே விளையாடினேன். நான் எப்போதும் என்னுடைய தந்தைக்காக விளையாடுகிறேன். டெஸ்ட் போட்டிகளின் போது அவருக்காக சல்யூட் செய்தேன். அவர் இந்திய ராணுவத்தில் வேலை செய்தவர். இன்றைய சல்யூட் மைதானத்தில் இருந்த அவருக்கானது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்