< Back
கிரிக்கெட்
2024 மகளிர் பிரீமியர் லீக் ஏலம் எப்போது ?  - வெளியான அறிவிப்பு
கிரிக்கெட்

2024 மகளிர் பிரீமியர் லீக் ஏலம் எப்போது ? - வெளியான அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Nov 2023 8:03 PM IST

மகளிர் பிரீமியர் லீக் இரண்டாவது சீசன் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற உ ள்ளது

மும்பை,

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய 5 அணிகள் விளையாடியது.ஐ.பி.எல். போட்டிக்கு இணையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணி கோப்பையை வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் நடைபெற உ ள்ளது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனுக்கான ஏலம் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்