முதன்முறையாக மிக அழகான பெண்ணை கவனித்ததும்... ஸ்ரேயாஸ் அய்யர் செய்த செயல்
|ஸ்ரேயாஸ் அய்யர் ஒவ்வொரு முறை பவுண்டரி விளாசும்போதும், ஸ்ரேயாஸ் என்னை திருமணம் செய்யுங்கள் என்ற போஸ்டர்களை இளம்பெண்கள் காட்டுவார்கள்.
புதுடெல்லி,
ஐ.பி.எல். 2024 போட்டி தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஸ்ரேயாஸ் அய்யர். காயத்தினால் அவதிப்பட்டு வந்த அவர், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். எனினும், ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கியதும் அதில் அவர் பிசியாகி விட்டார்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து, கபில் சர்மா ஷோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சில சுவாரசிய உரையாடல்கள் கடந்தோடின. நிகழ்ச்சியை நடத்திய கபில் கூறும்போது, ஒவ்வொரு முறையும் ஸ்ரேயாஸ் அய்யர் பவுண்டரி விளாசும்போதும், ஸ்ரேயாஸ் என்னை திருமணம் செய்யுங்கள் என்ற போஸ்டர்களை ஏந்திய இளம்பெண்களை நோக்கி கேமிராமேனின் கேமிரா கவனம் செலுத்தி கொண்டிருக்கும். ஸ்ரேயாசும் திருமணம் முடிக்காதவராக இருக்கிறார் என கபில் கூறினார்.
நகைச்சுவை நடிகராக இருந்து நடிகரான கபில் பின்னர், ஸ்ரேயாஸ் அய்யரை நோக்கி, இதன்பின் கேமிராமேனிடம் சென்று அந்த இளம்பெண் எங்கே அமர்ந்திருந்தார் என்று நீங்கள் கேட்டதுண்டா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரேயாஸ், ஐ.பி.எல். போட்டி தொடரின் என்னுடைய முதல் ஆண்டில், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மிக அழகிய பெண் ஒருவரை நான் கவனித்தேன். உடனே அவரை நோக்கி ஹலோ என்று கையசைத்தேன். ஆனால், இது நடந்து பல ஆண்டுகள் ஓடி விட்டன.
அந்த நேரத்தில், பேஸ்புக் பிரபலம் அடைந்திருந்தது. அதனால், அதில் ஏதேனும் ஒரு செய்தி வரும் என நம்பிக்கையுடன் இருந்தேன். அதனை அலசி ஆராயவும் செய்தேன். எனக்கு நடந்த ஒரே ஒரு விசயம் அது ஒன்றே என்று கூறினார்.
சிறுவனாக இருந்தது முதல் நீங்கள் பார்த்து வியந்த, ஒரு வீரரின் பெயரை கூறும்படி ஸ்ரேயாஸ் கேட்டு கொண்டார். அதற்கு பதிலளித்த ஸ்ரேயாஸ், சிறுவயது முதல் ரோகித் சர்மாவே தன்னுடைய லட்சிய மனிதராக இருந்தவர் என கூறினார். திறமையான சக்தி வாய்ந்த தொடக்க ஆட்டக்காரராக அவருடைய விளையாட்டை பார்த்திருக்கிறேன். அதில் இருந்து அவருடைய விசேஷகுணங்களை கற்று கொண்டேன் என கூறினார்.
ஆனால் ரோகித் சர்மாவோ, உடைமாற்றும் அறையில், எனக்கு முதுகிற்கு பின்னால் என்னை பற்றி தற்போதுள்ள வீரர்கள் தவறாக கூறுகிறார்கள் என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் நகைச்சுவையாக கூறினார்.