< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததன் காரணம் என்ன? இங்.கேப்டன் விளக்கம்

image courtesy; twitter/@ICC

கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததன் காரணம் என்ன? இங்.கேப்டன் விளக்கம்

தினத்தந்தி
|
25 Jan 2024 2:33 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்;- 'நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் இந்தியாவில் இது போன்ற மைதானங்களில் விளையாடும்போது நிச்சயமாக சவால்கள் நிறைந்திருக்கும். இருந்தாலும் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவிக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு அழுத்தத்தை அளிக்க முடியும். அதனாலே முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்..

அதேபோன்று இந்த போட்டிக்கு முன்பாக நாங்கள் மிகச்சிறப்பாக தயாராகி உள்ளதால் நிச்சயம் எங்களால் ரன்களை குவிக்க முடியும். மேலும் சொந்த மண்ணில் இந்தியா எவ்வளவு சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது எங்களுக்கு மட்டும் இன்றி மற்ற அனைத்து அணிகளுக்குமே தெரியும். அதேபோன்று இந்தியா ஒரு மிகச்சிறப்பான வெற்றிகரமான அணி. அவர்களுக்கு எதிரான இந்த போட்டி எங்கள் வீரர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறினார்.


மேலும் செய்திகள்