< Back
கிரிக்கெட்
சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன..? போட்டி முடிந்ததும் தோனி சொன்ன தகவல்
கிரிக்கெட்

சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன..? போட்டி முடிந்ததும் தோனி சொன்ன தகவல்

தினத்தந்தி
|
15 May 2023 10:27 AM IST

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியசாத்தில் கொல்கத்தா வீழ்த்தியது.

சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நாடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை சந்தித்தது .

இந்த போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியசாத்தில் கொல்கத்தா வீழ்த்தியது . அத்துடன் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறியதாவது;

இரண்டாவது இன்னிங்ஸில் முதல் பந்தை வீசிய நிமிடமே எங்களுக்கு 180 ரன்கள் தேவை என்று தெரிந்துவிட்டது. அப்போது தான் பேட்டிங் செய்திருக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். ஆனால் இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் எடுக்க எங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது.

போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தோல்விக்கு யாரையும் குறை கூறமுடியாது. அனைவரும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தனர். இவ்வாறு தோனி கூறினார்.

மேலும் செய்திகள்