< Back
கிரிக்கெட்
மயங்க் யாதவ் காயத்தின் நிலை என்ன ..? - க்ருனால் பாண்ட்யா கொடுத்த அப்டேட்

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

மயங்க் யாதவ் காயத்தின் நிலை என்ன ..? - க்ருனால் பாண்ட்யா கொடுத்த அப்டேட்

தினத்தந்தி
|
8 April 2024 12:40 PM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

லக்னோ,

ஐ.பி.எல் தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி சிறப்பான தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறியது. குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

லக்னோ தரப்பில் அபாரமாக பந்துவீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் வீசிய உடன் காயம் காரணமாக லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் மயங்க் யாதவின் காயம் குறித்து கருத்து தெரிவித்த க்ருனால் பாண்ட்யா கூறியதாவது, மயங்க் யாதவுக்கு என்னவாயிற்று என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் போட்டி நடைபெறும் போதே நான் அவரிடம் சில நொடிகள் பேசினேன். அப்போது அவர் நன்றாக இருந்தார்.

வலைப்பயிற்சியில் நெருப்பாக செயல்படும் அவர் கடந்த வருடம் காயத்தால் விளையாடவில்லை. இருப்பினும் அவருக்கு பிரகாசமான வருங்காலம் உள்ளது. எனவே இங்கிருந்து தன்னுடைய கேரியரில் அவர் எப்படி முன்னேறுவார் என்பதை பார்ப்பது சுவாரசியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்