< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ்- வங்கதேசம் இடையேயான முதல் டி20 மழையால் பாதியில் ரத்து
|3 July 2022 11:59 AM IST
வெஸ்ட் இண்டீஸ்- வங்கதேசம் இடையேயான முதல் டி20 மழையால் பாதியில் ரத்துசெய்யப்பட்டது.
டோமினிகா
வங்காளதேச அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 13 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டியின் குறுக்கே மழை பெய்தது.
மழை தொடர்ந்து பெய்த காரணத்தால், மேற்கொண்டு போட்டியை நடத்த முடியவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் முடிவு இல்லாமல் பாதியில் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.