டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
|டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்டிகுவா,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.
ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு ரோவ்மன் பவல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:-
ரோவ்மேன் பவல் (கேப்டன்), அல்சாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல், ஷெர்பேன் ரூதர்போர்ட், ரோமரியோ ஷெப்பர்ட்.