ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..!
|இந்த அணிக்கு கிரெய்க் பிராத்வைட் கேப்டனாகவும், அல்சாரி ஜோசப் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிரினிடாட்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கிரெய்க் பிராத்வைட் கேப்டனாகவும், அல்சாரி ஜோசப் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் 7 பேர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு;-
கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), அல்சாரி ஜோசப் , சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோசுவா டாசில்வா, அகீம் ஜோர்டான், குடகேஷ் மோட்டி, கெவின் சின்கிளேர், கெமர் ரோச், ஷமர் ஜோசப், சக்கரி மெக்காஸ்கி மற்றும் டெவின் இம்லாச்.