< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் திலக் வர்மாவுக்கு பதிலாக இவரை தேர்வு செய்திருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணியில் திலக் வர்மாவுக்கு பதிலாக இவரை தேர்வு செய்திருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா

தினத்தந்தி
|
7 July 2023 7:20 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய டி20 அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சென்றடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், டி20 அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய டி 20 அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஹார்டிக் பாண்டியா தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இளம் வீரர்களை நிரம்பிய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மாவிற்கும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பு சரியான ஒன்று என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா திலக் வர்மாவை காட்டிலும் ரிங்கு சிங்கை அந்த இடத்திற்கு தேர்வு செய்திருக்கலாம் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறுகையில்,

இந்திய அணியில் சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் விளையாடுவார்கள் என்பதால் அவர்களுக்கு பிறகு தான் திலக் வர்மாவால் பேட்டிங் செய்ய களமிறங்க முடியும். டாப் ஆர்டரில் சுப்மன் கில், இஷான் கிஷன், ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடவே அதிக வாய்ப்புள்ளது. எனவே திலக் வர்மா பின்வரிசையில் களமிறங்க நேரிடும்.

ஆனால் அவரை காட்டிலும் பின் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் திறன் கொண்ட ரிங்கு சிங்கை அணியில் தேர்வு செய்திருந்தால் அது சரியான தேர்வாக அமைந்திருக்கும். ஏனெனில் ரிங்கு சிங் பின் வரிசையில் களமிறங்கி எவ்வாறு அதிரடி காட்டுவார் என்பதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்