தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்...4வது டி20 போட்டியில் இந்தியாவுடன் நாளை மோதல்...!
|இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
ப்ளோரிடா,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 3வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி நாளை அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், தொடரை இழக்க கூடாது என்பதற்காக இந்திய அணியும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.