தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
|தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கெதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ் போட்டி வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். எனவே இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பனிச்சுமை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டன் அல்சாரி ஜோசப்புக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் அணிக்கு திரும்பியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:-
கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜோசுவா டா சில்வா (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், கீசி கார்டி, பிரையன் சார்லஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜேசன் ஹோல்டர், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், ஷமர் ஜோசப், மிகைல் லூயிஸ், குடகேஷ் மோட்டி, கெமர் ரோச், ஜேடன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கன்