< Back
கிரிக்கெட்
லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட்: சேவாக் அணியில் இணைந்த கிறிஸ் கெயில்- ரசிகர்கள் மகிழ்ச்சி

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட்: சேவாக் அணியில் இணைந்த கிறிஸ் கெயில்- ரசிகர்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
4 Sept 2022 5:30 PM IST

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் நேசிக்கும் வெளிநாட்டு வீரர்களில் கிறிஸ் கெயிலும் ஒருவர்.

மும்பை,

ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. மொத்தம் 4 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 6 நகரங்களில் 16 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர சேவாக் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் குஜராத் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெயிலை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் நேசிக்கும் வெளிநாட்டு வீரர்களில் கிறிஸ் கெயிலும் ஒருவர். இந்த நிலையில் உலக கிரிக்கெட்டின் சிறந்த 2 தொடக்க வீரர்கள் ஒன்றாக இணைந்து விளையாட உள்ளது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் ஜெயண்ட்ஸ் அணி:

வீரேந்திர சேவாக் (கேப்டன்), பார்த்திவ் படேல், கிறிஸ் கெய்ல், எல்டன் சிகும்புரா, கிறிஸ் ட்ரெம்லெட், ரிச்சர்ட் லெவி, கிரேம் ஸ்வான், ஜோகிந்தர் சர்மா, அசோக் டிண்டா, டேனியல் வெட்டோரி, கெவின் ஓபிரியன், ஸ்டூவர்ட் பின்னி, மிட்செல் மெக்லெனகன், லெண்டல் சிம்மன்ஸ், மன்விந்தர் பிஸ்லா, அஜந்தா மெண்டிஸ்.

மேலும் செய்திகள்