< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டருக்கு கொரோனா தொற்று!

கோப்புப்படம் 

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டருக்கு கொரோனா தொற்று!

தினத்தந்தி
|
23 July 2022 3:39 PM IST

இந்திய அணிக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

இந்திய அணி 5டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர் ஹோல்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் முதல் ஒருநாள் போட்டியில் இடம் பெறவில்லை. ஏற்கனவே வங்காள தேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ஹோல்டர் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை என்றாலும் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் தற்போது வரை தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்