< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு
|1 Aug 2023 7:04 PM IST
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 114 ரன்னில் சுருட்டி வெற்றி கண்ட இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மல்லுக்கட்டுகின்றன. டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது