இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்- வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
|இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்டிகுவா,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் ஜேசன் ஹோல்டர் மீண்டும் இணைய உள்ளார். வங்காள தேசம் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத நிலையில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், கீசி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மேன் பவல், ஜெய்டன் சீல்ஸ்.