ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
|இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 17-ம் தேதி தொடங்குகிறது.
செயின்ட் ஜான்ஸ் [ஆன்டிகுவா],
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குகிறது,
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான 15 வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் விபரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), அல்ஜாரி ஜோசப், அலிக் அதானாஸ், டெடி பிஷப், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் க்ரீவ்ஸ், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், குடகேஷ் மோட்டி, க்ஜோர்ன் ஓட்டேலி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஓஷேன் தாமஸ், ஓஷேன் தாமஸ் ஜூனியர்.
டி20 போட்டிக்கான வீரர்கள் விபரம்: ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெர்ஃபேன் ரூதர், ரோமர்யோ ஷெஃபர்ட், ஓஷேன் தாமஸ்.
ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன், இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் ஜனவரி 17-ம் தேதி தொடங்குகிறது.
ஒருநாள் தொடர் பிப்ரவரி 2-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. பிப்ரவரி 6-ம் தேதி கான்பெராவில் கடைசி போட்டி நடைபெறுகிறது.
டி20 தொடர் பிப்ரவரி 9-ம் தேதி ஹோபார்ட்டில் தொடங்குகிறது. பிப்ரவரி 13-ம் தேதி பெர்த்தில் கடைசி போட்டி நடைபெறுகிறது.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் டெஸ்ட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி விவரம்; பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.
ஆஸ்திரேலியா ஒருநாள் அணி விவரம்; ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அப்போட், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஜோஷ் இங்க்லிஸ், மார்னஸ் லபுஸ்சாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், லேன்ஸ் மோரிஸ், ஜை ரிச்சர்ட்சன், மேட் ஷார்ட், ஆடம் ஜாம்பா.