< Back
கிரிக்கெட்
இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம் - கேன் வில்லியம்சன்

Image Courtesy: Instagram- kane_s_w

கிரிக்கெட்

'இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம்' - கேன் வில்லியம்சன்

தினத்தந்தி
|
28 Feb 2024 12:29 PM IST

கேன் வில்லியம்சன் - சாரா ரஹீம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன் மூன்றாவது முறையாக தந்தையானார். வில்லியம்சன் - சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

வில்லியம்சன் தனது மனைவி சாரா ரஹீம் மற்றும் புதிதாக பிறந்த மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அந்த பதிவின் தலைப்பில் " இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம்" என தெரிவித்தார்.

கேன் வில்லியம்சன் - சாரா ரஹூமுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். கேன் வில்லியம்சன் - சாரா ரஹூம் தம்பதிக்கு 2019 -ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பெயர் மேகி. இவருக்கு வயது 3. இரண்டாவதாக கடந்த 2022-ல் மகன் பிறந்தார். அவருக்கு தற்போது ஒரு வயது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்