< Back
கிரிக்கெட்
2-வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தாயகம் திரும்புவோம் - சோதி நம்பிக்கை

image courtesy; ICC

கிரிக்கெட்

2-வது டெஸ்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தாயகம் திரும்புவோம் - சோதி நம்பிக்கை

தினத்தந்தி
|
5 Dec 2023 4:44 PM IST

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காளதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சிலெட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்புரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோதி அளித்த பேட்டியில், ''முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் விளையாடிய விதம் எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டது. ஆனால் இங்குள்ள சீதோஷ்ண நிலையில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்கள் கற்றுத்தந்துள்ளனர்.

அடுத்த ஆட்டத்தில் அதை நாங்கள் சரியாக செய்வோம் என்று நம்புகிறேன். தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள். வெற்றியுடன் தாயகம் திரும்புவோம்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்