< Back
கிரிக்கெட்
இந்த போட்டியை நாங்கள் முன்கூட்டியே முடிக்க நினைத்தோம் ஆனால்... - வெற்றிக்கு பின் சுப்மன் கில் பேட்டி

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

இந்த போட்டியை நாங்கள் முன்கூட்டியே முடிக்க நினைத்தோம் ஆனால்... - வெற்றிக்கு பின் சுப்மன் கில் பேட்டி

தினத்தந்தி
|
22 April 2024 12:06 PM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

முல்லன்பூர்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி குஜராத் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

20 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 35 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் தெவேடியா 36 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியை நாங்கள் முன்கூட்டியே முடிக்க நினைத்தோம். ஆனால் போட்டி மைதானத்தின் தன்மை காரணமாக கடைசி ஓவர் வரை சென்றது. இறுதியில் இந்த இரண்டு புள்ளிகளை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி.

கேப்டன்சி செய்வது உண்மையிலேயே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட விரும்புகிறேன். பேட்டிங் செய்யும் போது கேப்டன்சி பற்றி அதிகம் யோசிப்பது கிடையாது. லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்து விட்டேன். எங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் சரியான பங்களிப்பினாலே இந்த வெற்றி கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்