< Back
கிரிக்கெட்
290 ரன்களை எளிதாக சேசிங் செய்யலாம் என்று நினைத்தோம்..ஆனால் - தோல்வி குறித்து எய்டன் மார்க்ரம் கருத்து

Image Courtesy: PTI

கிரிக்கெட்

290 ரன்களை எளிதாக சேசிங் செய்யலாம் என்று நினைத்தோம்..ஆனால் - தோல்வி குறித்து எய்டன் மார்க்ரம் கருத்து

தினத்தந்தி
|
22 Dec 2023 11:55 AM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பார்ல்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பின்னர் தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நாங்கள் இந்த தொடரில் நல்ல நிலையில் இருந்ததாகவே உணர்கிறேன். அதேபோன்று ஒவ்வொரு தொடரின்போதும் முடிவை தீர்மானிக்கும் போட்டி நடைபெறும்போது சிறப்பாக இருக்கும். இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் இந்த போட்டியின்போதும் மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி சிறப்பான ஆதரவினை வழங்கி இருந்தனர். ஆனால் எங்களால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனது.

இருந்தாலும் நாங்கள் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவே நினைக்கிறேன். இந்த மைதானத்தில் 290 ரன்களை எளிதாக சேசிங் செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். அவர்களின் சிறப்பான பந்துவீச்சே எங்களது தோல்விக்கு காரணம். எதிர்வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்