< Back
கிரிக்கெட்
நாங்கள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்க வேண்டும் ஆனால்... - டோனோவன் பெரேரா பேட்டி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

நாங்கள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்க வேண்டும் ஆனால்... - டோனோவன் பெரேரா பேட்டி

தினத்தந்தி
|
12 May 2024 7:52 AM IST

இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் அது நாங்கள் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

புள்ளிப்பட்டியலில் 2 முதல் 4 இடங்களில் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் தொடரில் இருந்து வெளியேறி விட்டன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

அதில் மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. . இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு, முதல் இரண்டு இடத்தில் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும்.

அதேவேளையில் சென்னை அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும். இந்நிலையில் இந்த போட்டி குறித்து ராஜஸ்தான் வீரர் டோனோவன் பெரேரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நாங்கள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் ஐ.பி.எல் ஒரு நீண்ட தொடர். எனவே நீங்கள் இரண்டாம் பகுதியில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். முதல் பாதியில் பெரும்பாலான ஆட்டங்களை வென்றதன் மூலம் நாங்கள் சிறப்பாக ஆரம்பித்தோம்.

எங்களிடம் மூன்று ஆட்டங்கள் இருந்தபோதிலும் நாளைய (இன்றைய) போட்டி முக்கியமானது. நாங்கள் அதையெல்லாம் எடுத்துக் கொண்டு எங்கள் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் அது நாங்கள் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

சி.எஸ்.கே அணி நல்ல அணி என்று எங்களுக்கு தெரியும். சில போட்டிகள் எங்களுக்கும் நெருக்கமாக இருந்தது.போட்டியில் சிறிய வித்தியாசங்கள் எந்த வழியிலும் செல்லலாம். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதின் மூலமாக நாளை (இன்று) நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்