< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பையில் நீங்கள் கேட்ச்சை தவறவிட்டதால் தான் தோற்றோம்...கேள்வி எழுப்பிய ரசிகரை சரமாரியாக தாக்கிய பாக். வீரர்
கிரிக்கெட்

உலகக்கோப்பையில் நீங்கள் கேட்ச்சை தவறவிட்டதால் தான் தோற்றோம்...கேள்வி எழுப்பிய ரசிகரை சரமாரியாக தாக்கிய பாக். வீரர்

தினத்தந்தி
|
6 Dec 2022 4:58 AM GMT

2021 டி20 உலககோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

லாகூர்,

பாகிஸ்தான் அணியின் முன்ன்ணி வீரர் ஹசன் அலி. 28 வயதான ஹசன் அலி அண்மையில் பாகிஸ்தான் அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் இவர் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து அவர் உள்ளூர் போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி விளையாடி வருகிறார். இவர் பாகிஸ்தான் அணிக்காக கடைசியாக ஆசிய கோப்பையில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.

திறமை வாய்ந்த வீரராக கருதப்படும் ஹசன் அலி சாம்பியன்ஸ் டிராபி 2017 ஆம் ஆண்டு தொடரில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். இவர் 2021 ஆம் ஆண்டு யுஏயில் நடந்த டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் மேத்யூ வேட்டின் மிக முக்கியமான கேட்சை தவறவிட்டார். இதன் பின்னர் அதிரடியாக ஆடிய வேட் அடுத்தடுத்து 3 சிக்சர்களை அடித்து ஆஸ்திரேலியவை வெற்றி பெறச் செய்தார். இதன் காரணமாக அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவி வெளியேறியது.

இந்நிலையில் ஹசன் அலி பஞ்சாப் மாகாணத்தில் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது பவுண்டரி லைனில் இருந்த ரசிகர்கள் கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் மேத்யூ வேட்டின் கேட்ச்சை தவறவிட்டதுக்கு தற்போது அவரை கிண்டல் செய்தனர். முதலில் பொறுத்துக் கொண்டு ஆட்டத்தில் கவனம் செலுத்திய ஹசன் அலியை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் வம்பு இழுத்தனர்.

இதையடுத்து போட்டி முடிந்தவுடன் நேரடியாக பார்வையாளர்கள் மாடத்திற்கு சென்ற ஹசன் அலி கிண்டல் செய்தவரை கடுமையாக உதைத்து தாக்கினார். இதனால் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த சிலர், ஹசன் அலியை தாக்க முயன்றனர். இதனை தொடர்ந்து அங்கு இருந்த பாதுகாவலர்கள் ஹசன் அலியை விலக்கிவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.



மேலும் செய்திகள்