< Back
கிரிக்கெட்
அந்த எண்ணத்தை நாம் கைவிட வேண்டும் - பிசிசிஐக்கு சவுரவ் கங்குலி கோரிக்கை
கிரிக்கெட்

அந்த எண்ணத்தை நாம் கைவிட வேண்டும் - பிசிசிஐக்கு சவுரவ் கங்குலி கோரிக்கை

தினத்தந்தி
|
3 Feb 2024 8:08 PM IST

கடந்த 6 -7 வருடங்களாக சொந்த மண்ணில் அமைக்கப்பட்ட சுமாரான பிட்சுகள் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் தரம் குறைந்துள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தரமான பவுலர்களைக் கொண்டிருந்தும் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்து வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை நாம் கைவிட வேண்டும் பிசிசிஐக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கோரிக்கை வைத்துள்ளார். இது போன்ற மைதானங்களை அமைத்ததாலேயே தற்போது இந்திய அணியின் பேட்டிங் தரம் குறைந்து விட்டதாக கவலையை தெரிவிக்கும் அவர் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;-

"பும்ரா, ஷமி, சிராஜ், முகேஷ் ஆகியோர் பந்து வீசுவதை பார்க்கும்போது இந்தியாவில் ஏன் நாம் சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைக்க வேண்டும் என்ற ஆச்சரியம் எனக்கு ஏற்படுகிறது. என்னை பொறுத்தவரை நல்ல மைதானத்தில் விளையாடுவது ஒவ்வொரு போட்டியிலும் நம்மை வலுப்படுத்தும்.

குறிப்பாக அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்சர் ஆகியோரை கொண்ட நம்முடைய பவுலிங் கூட்டணி எந்த வகையான மைதானத்திலும் 20 விக்கெட்டுகளை எடுக்க கூடியதாகும். கடந்த 6 -7 வருடங்களாக சொந்த மண்ணில் அமைக்கப்பட்ட சுமாரான பிட்சுகள் காரணமாக நம்முடைய பேட்டிங்கின் தரம் குறைந்துள்ளது. எனவே நல்ல பிட்ச் அவசியம். அதிலும் இந்திய அணியால் 5 நாட்களில் விளையாடி வெல்ல முடியும்" என்று பிசிசிஐயை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்