< Back
கிரிக்கெட்
நாங்கள் தோல்வியடைந்தது கடைசி பந்தில்தான் - சஞ்சு சாம்சன்

image courtesy: AFP

கிரிக்கெட்

நாங்கள் தோல்வியடைந்தது கடைசி பந்தில்தான் - சஞ்சு சாம்சன்

தினத்தந்தி
|
11 April 2024 7:18 PM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வியடைந்தது.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது. நடப்பு சீசனில் ராஜஸ்தான் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சஞ்சு சாம்சன், பராக் இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக கில் 72 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில்: "இந்த போட்டியின் கடைசி பந்தில் தான் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். இப்படி ஒரு தோல்வி ஏற்பட்டது குறித்து பேசுவது மிகவும் கடினமானது. ஏனெனில் ஒரு கேப்டனாக ஒரு போட்டியை தோற்கும்போது எந்த இடத்தில் நாம் தோற்றோம் என்று கூறுவது மிகவும் கடினம்.

உண்மையிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி பந்தில் போட்டியை வென்றுள்ளனர். நான் களத்தில் நின்று பேட்டிங் செய்தபோது 180 ரன்கள் வரை இருந்தால் அதுவே போதும் என்று நினைத்தேன். ஆனால் 196 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ஸ்கோர்தான் இருந்தாலும் குஜராத் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி எங்களுக்கு தோல்வியை பரிசளித்துள்ளனர்'' என்று கூறினார்.

மேலும் செய்திகள்