< Back
கிரிக்கெட்
பாகிஸ்தானை 4 துறைகளிலும் எங்களால் வீழ்த்த முடியும் - அமெரிக்க வீரர் உறுதி

image courtesy: AFP

கிரிக்கெட்

பாகிஸ்தானை 4 துறைகளிலும் எங்களால் வீழ்த்த முடியும் - அமெரிக்க வீரர் உறுதி

தினத்தந்தி
|
12 Sept 2024 7:44 PM IST

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் தோற்கடிப்போம் என்று அலி கான் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களில் கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வி கண்டு வருகிறது. கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த அந்த அணி, டி20 உலகக்கோப்பையில் அமெரிக்காவிடம் தோல்வியை தழுவி லீக் சுற்றுடன் வெளியேறியது.

அதோடு வங்காளதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இழந்து வரலாற்று தோல்வியை சந்தித்தது. அதனால் கடுமையான விமர்சனங்களை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியை பேட்டிங், பவுலிங், பீல்டிங் மட்டுமின்றி பிட்னசிலும் வீழ்த்தும் திறமை தங்களிடம் இருப்பதாக அமெரிக்க வீரர் அலி கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை அவமதிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்துவதற்கான திறமை எங்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர்களுக்கு எதிராக மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதை செய்வோம். நாங்கள் தற்போது நல்ல அணியாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் முழு பலத்துடன் கூடிய அணியுடன் களமிறங்கும்போது பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த அணியையும் எங்களுடைய நாளில் வீழ்த்துவோம். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் போட்டி நடைபெற்றால் அது சிறப்பானதாக இருக்கும்.

நாங்கள் தற்போது அழுத்தத்தில் இல்லை. உண்மையில் பாகிஸ்தான் அணிதான் தற்போது அழுத்தத்தில் இருக்கும். எனவே அவர்களுக்கு எதிரான போட்டியை மற்றொரு போட்டியாக நாங்கள் எடுத்துக் கொள்வோம். அவர்களை மீண்டும் தோற்கடிப்பதற்கான திறன் மற்றும் தன்னம்பிக்கை எங்களிடம் இருப்பதை அறிவோம். பேட்டிங், பவுலிங், பீல்டிங் மட்டுமின்றி பிட்னஸ் அளவிலும் அவர்களை வீழ்த்த முடியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்