< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுவதற்காக மெல்போர்ன் வந்தடைந்தது இந்திய அணி
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுவதற்காக மெல்போர்ன் வந்தடைந்தது இந்திய அணி

தினத்தந்தி
|
20 Oct 2022 4:12 PM IST

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி மெல்போர்ன் வந்தடைந்தது.

மெல்போர்ன்,

டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இந்த மாத தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெர்த்தில் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும், பிரிஸ்பேனில் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடியது.

இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, அதே நேரத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்தியா வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்திய அணி பிரிஸ்பேனில் இருந்து மெல்போர்னுக்கு பயணம் செய்த வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தை கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில், போட்டி நடைபெறும் நாளில் மழைக்கு 80 சதவீத வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையை கூறியிருப்பது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்