படுதோல்வி அடைந்த இந்திய அணி: மனமுடைந்த ரோகித் சர்மா... ஆறுதல் சொன்ன டிராவிட்- வைரல் வீடியோ
|இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றது.
அடிலெய்டு,
8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் இன்று நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி படுதோல்வியை சந்தித்து உள்ளது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதும் இந்திய வீரர்கள் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர். குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகுந்த வருத்தத்துடன் இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றது. இதை கண்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரோகித்தின் முதுகில் தட்டி கொடுத்து அவருக்கு ஆறுதல் கூறினார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.