< Back
கிரிக்கெட்
இது தான் கோடு...இதை தாண்டி வரக்கூடாது...தேஷ்பாண்டேவுக்கு அட்வைஸ் செய்த தோனி - வீடியோ...!
கிரிக்கெட்

'இது தான் கோடு...இதை தாண்டி வரக்கூடாது'...தேஷ்பாண்டேவுக்கு அட்வைஸ் செய்த தோனி - வீடியோ...!

தினத்தந்தி
|
4 April 2023 4:31 PM IST

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

சென்னை,

ஐபிஎல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி ருதுராஜ், கான்வேயின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி முதலில் கைல் மேயர்ஸ் அதிரையால் எளிதில் வெற்றி பெறும் என நினைத்திருந்த வேளையில் மொயீன் அலியின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீசும் போது சென்னை அணியின் இம்பேக்ட் பிளேயராக அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டே களம் புகுந்தார்.

சென்னை அணி பந்துவீசும் போது ஆட்டத்தின் 4வது ஓவரை வீசிய தேஷ்பாண்டே அந்த ஓவரில் 2 நோ பால் உடன் 18 ரன்களை வாரி கொடுத்தார். இதற்கடுத்து சுதாரித்து கொண்ட தேஷ்பாண்டே அடுத்த 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொத்தத்தில் இந்த ஆட்டத்தி 4 ஓவர்கள் வீசிய அவர் 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி 3 நோபால்களை வீசியது. அந்த மூன்று நோபால்களையும் துஷார் தேஷ்பாண்டே தான் வீசினார். இதையடுத்து ஆட்டத்தின் நடுவில் தேஷ்பாண்டேவிடம் சென்ற தோனி கிரீஸ் கோட்டை காண்பித்து நோ பால் பற்றி பேசினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்