< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
'நான் ஓவர் போடவா' சாம்சனிடம் சைகை காட்டிய பட்லர் - வைரல் வீடியோ...!
|3 April 2023 5:19 PM IST
ஐபிஎல் தொடரின் 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று மோதின.
ஐதராபாத்,
ஐபிஎல் தொடரின் 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 203 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் பட்லர், ஜெய்ஸ்வால், சாம்சன் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் கேப்டன் சஞ்சு சாம்சனிடம் நான் ஓவர் போடவா என சைகை மூலம் கேட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.