டாஸ் போடச்சென்ன வர்ணணையாளர்.. நாணயம் இல்லை எனக்கூறிய தவன்... வைரல் வீடியோ
|தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் போடும்போது தவனிடம் நாணயத்தை கொடுக்க போட்டி நடுவர் மறந்துவிட்டார்.
ராஞ்சி,
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடும் சமயத்தில் ஒரு சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது.
டாஸ் போடும் இடத்தில் இரு அணி கேப்டன்கள், போட்டி நடுவர் மற்றும் வர்ணணையாளர் இருந்தனர். அப்போது வர்ணணையாளர் சஞ்சை மாஞ்ச்ரேகர் இந்திய கேப்டன் தவனை டாஸ் போடச்சென்னார்.
ஆனால் தவனோ, நாணயம் என்னிடம் இல்லை என்றும், போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்திடம் நாணயம் இருப்பதாகவும் கூறினார். போட்டி நடுவரான ஜவகல் ஸ்ரீநாத் தவனிடம் டாஸ் போட பயன்படுத்தப்படும் நாணயத்தை கொடுக்க மறந்துவிட்டார்.
இதனை ஷிகர் தவன் நிணைவுபடுத்திய பிறகு தனது பையில் இருந்து போட்டி நடுவர் நாணயத்தை கொடுத்தார். அதன் பிறகு தவன் டாஸ் போட்டார். இந்த வீடியோவை பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்து 34 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.