< Back
கிரிக்கெட்
ஐபிஎல்: விருத்திமான் சஹா கொடுத்த கேட்ச்சை பிடிக்க சாம்சன், ஹெட்மயர், ஜூரல் மோதல்... வைரல் வீடியோ.!

image screengrab from video tweeted by @IPL

கிரிக்கெட்

ஐபிஎல்: விருத்திமான் சஹா கொடுத்த கேட்ச்சை பிடிக்க சாம்சன், ஹெட்மயர், ஜூரல் மோதல்... வைரல் வீடியோ.!

தினத்தந்தி
|
17 April 2023 4:31 PM IST

சஹா கொடுத்த கேட்ச் வாய்ப்பை பிடிக்க ராஜஸ்தான் கேப்டன் சாம்சன், ஹெட்மயர், துருவ் ஜூரல் ஆகிய 3 பேரும், மோதிக்கொண்டனர்.

அகமதாபாத்,

ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் டிரெண்ட் போல்ட் வீசிய பந்தை குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சஹா அடிக்க முற்பட்டபோது அது மைதானத்தின் நடுவே உயரமாக சென்றது.

இந்த கேட்ச் வாய்ப்பை ராஜஸ்தான் அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன், ஹெட்மயர் மற்றும் துருவ் ஜுரல் ஆகிய மூன்று பேரும் ஒரே நேரத்தில் பிடிக்க முற்பட்டபோது, மைதானத்தின் நடுவே மோதிக்கொண்டனர்.

இதில் சாம்சன் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் கீழே விழுந்தனர். எனினும், சாம்சன் கையில் பட்டு துள்ளிய பந்தை டிரெண்ட் போல்ட் அசால்ட்டாக பிடித்து சஹாவை அவுட்டாக்கினார்.

ஒரு கேட்ச்சை பிடிக்க ஒரே நேரத்தில் மூவரும் மோதிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்