< Back
கிரிக்கெட்
குத்துசண்டை வீரர் அண்டர்டேக்கரின் கொண்டாட்ட பாணியை சுப்மன் கில்-லை பார்த்து செய்த கோலி - வைரல் வீடியோ

Image Courtesy : Screengarb from Twitter 

கிரிக்கெட்

குத்துசண்டை வீரர் அண்டர்டேக்கரின் கொண்டாட்ட பாணியை சுப்மன் கில்-லை பார்த்து செய்த கோலி - வைரல் வீடியோ

தினத்தந்தி
|
20 May 2022 6:25 PM IST

கில் அருகில் வந்த கோலி அண்டர்டேக்கர்-யின் பிரபல கொண்டாட்டத்தை செய்து காண்பித்தார்.

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்று நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது.

அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் அதிரடியால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது . இதில் பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கோலி 73 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - சாஹா களமிறங்கினர். அப்போது முதல் பந்தை வீசபடுவதற்கு முன் கில் அருகில் வந்த பெங்களூரு வீரர் கோலி குத்துசண்டை வீரர் அண்டர்டேக்கர்-யின் பிரபல கொண்டாட்டத்தை செய்து காண்பித்தார்.

அண்டர்டேக்கர் ஒவ்வொரு போட்டியிலும் எதிராளியை வீழ்த்தப்போகும் தருணத்தில் தனது கையை கழுத்து அருகே கொண்டு சென்று செய்யும் கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது. கோலி இதை செய்வதை மைதானத்தின் பெரிய திரையில் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

அதுமட்டுமின்றி இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்