< Back
கிரிக்கெட்
பாகிஸ்தான் அணியின் தோல்வியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் ரசிகர்கள்
கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் தோல்வியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் ரசிகர்கள்

தினத்தந்தி
|
13 Sept 2022 4:17 AM IST

பாகிஸ்தான் அணியின் தோல்வியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் காபூல் நகரில் வீதிகளில் இறங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

காபூல்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. பாகிஸ்தான் அணியின் தோல்வியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் காபூல் நகரில் வீதிகளில் இறங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர்4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் போராடி தோற்றது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் கேலரியில் இவ்விரு நாட்டு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இருக்கைகளை உடைத்து எறிந்து தாக்கிக் கொண்டனர். இதனால் பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள், அந்த அணி இறுதி சுற்றில் வீழ்ந்ததும் பூரிப்பில் மிதந்தனர்.

அந்த நாட்டு ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பதிவில், 'எங்களை மகிழ்ச்சி அடைய செய்த இலங்கை அணிக்கு வாழ்த்துகள். ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடுகிறது. நாங்கள் ஆசிய கோப்பை சாம்பியனை (இலங்கையை லீக்கில் வென்றது) வீழ்த்தி இருந்தோம். ஆனால் நீங்களோ (பாகிஸ்தான்) இலங்கையிடம் இரண்டு முறை தோற்று இருக்கிறீர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்