ஓய்வுக்குப் பிறகு போதைப் பழக்கத்துக்கு அடிமையானேன்- வாசிம் அக்ரம் ஒப்புதல்
|ஓய்வுக்குப் பிறகு போதைப் பழக்கத்துக்கு அடிமையானேன்" என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறி உள்ளார்.
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம். 2003ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் 900 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.18 வருட சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிற்கு பிறகு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலும் அக்ரம், 2003 இல் ஓய்வு பெற்றார்.இருந்தபோதிலும், அவர் பயிற்சியாளராகவும் மற்றும் வர்ணனையாளராகவும் தனது பணியை தொடங்கினார்.
அவரது புதிய சுயசரிதையான சுல்தான்: எ மெமோயரில் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.அதில் வாசிம் அக்ரம் தனதுனதாகவும் அதற்கு எதிரான தனது போரைப் பற்றி விவரித்து உள்ளார். வர்ணனையாளராக பணியாற்றியபோது கோகைன் பயன்படுத்தத் தொடங்கியதாக அதில் அவர் கூறியுள்ளார்.
வாசிம் அக்ரம் தனது போதைபழக்கம் குறித்து கூறி இருப்பதாவது:- இருப்பதாவது:-
ஒரு இரவில் 10 விருந்து நிகழ்வுகளுக்கு நீங்கள் போகமுடியும். அவ்வாறு சென்றது தான் என்னைப் பாதித்தது.
கோகோயின் என்னை ஒழுங்கற்றவராகவும் நேர்மையற்றவராகவும் ஆக்கிவிட்டது. இந்த கடினமான நேரத்தில் தனது முதல் மனைவி ஹுமா தனிமையை அனுபவித்தார்.
இறுதியில் எனது மனைவி ஹுமாவின் சுயநலமற்ற, சுயநினைவிழந்த செயல் என்னை போதை பிரச்னையில் இருந்து காப்பாற்றியது
அந்த வாழ்க்கை முடிந்து விட்டது. ஒருபோதும் அதனை திரும்பிப் பார்க்கமாட்டேன்," என கூறினார்.
வாசிமின் முதல் மனைவி ஹுமா 2009ஆம் ஆண்டு அரிய வகை பூஞ்சை தொற்று பரவியதில் திடீரென உயிரிழந்தார்.
1984ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டு வீரராக உருவான வாசிம் அக்ரம். இடது கை வேக பந்துவீச்சாளர். பாகிஸ்தானுக்காக 104 டெஸ்ட்போட்டிகள், 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1992ஆம் ஆண்டு உலக் கோப்பையை வென்றார்.
1993ஆம் ஆண்டு மற்றும் 2000ஆம் ஆண்டு காலகட்டத்துக்கு இடையே 25 டெஸ்ட் போட்டிகள், 109 ஒரு நாள் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். எல்லா காலத்திலும் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.